17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி:-சிகிச்சை பலனின்றி மதுரை நபர் உயிரிழப்பு…

கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி:-சிகிச்சை பலனின்றி மதுரை நபர் உயிரிழப்பு…

எழுதியவர்: Askar March 25, 2020, 7:58 am

கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் பலி:-சிகிச்சை பலனின்றி மதுரை நபர் உயிரிழப்பு…

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாதவர். இருப்பினும் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது பீதியை கிளப்பியது. சமூகப்பரவல் ஆன பிறகு தான் பிற நாடுகளில் கொரோனா மின்னல் வேகமெடுத்தது. அதுபோன்ற ஒரு நிலையை தமிழகமும் சந்திக்கும் அபாயகர சூழல் உருவாகியது.

முதல் பலி:

பாதிக்கப்பட்டவருக்கு மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு சி.ஓ.பி.டி., (நாள்பட்ட நுரையீரல் நோய்), சர்க்கரை வியாதி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால், நேற்று இரவு முதல் நிலைமை கவலைக்கிடமாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகம் கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது.*

பரவியது எப்படி?

இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பாதித்திருக்கும் வாய்ப்புள்ளதால், இது பற்றிய விசாரணையில் சுகாதார, வருவாய், போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் ஒரு கட்டட கான்டிராக்டர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாக உள்ளார். அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், அவர் சந்தித்த நபர்கள், நெருங்கி பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!