17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்-சங்கரன் கோவில் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்-சங்கரன் கோவில் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

எழுதியவர்: Askar March 24, 2020, 10:56 pm

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்-சங்கரன் கோவில் தாலுகா காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலைய எல்லை பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு,144 தடை உத்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கரன் கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம், உதவி ஆய்வாளர் விமலா மிக வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக அமல்படுத்தபட்டுள்ள 144 தடை உத்தரவை பற்றி விளக்கினார்.

மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தங்கள் வீடுகளிலேயே இருப்பது பாதுகாப்பானதாக அமையும் என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!