17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முக கவசம் அணிவோம் கொரானாவை விரட்டுவோம் வத்தலக்குண்டு நகர SDPI கட்சியினரின் சபாஷ் நடவடிக்கை!

முக கவசம் அணிவோம் கொரானாவை விரட்டுவோம் வத்தலக்குண்டு நகர SDPI கட்சியினரின் சபாஷ் நடவடிக்கை!

எழுதியவர்: Askar March 24, 2020, 10:38 pm

முக கவசம் அணிவோம் கொரானாவை விரட்டுவோம் வத்தலக்குண்டு நகர SDPI கட்சியினரின் சபாஷ் நடவடிக்கை!

நாடு முழுவதும் கொரானா வைரஸ் தொற்று எதிரொலியாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மிக முக்கியமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது.இதன் காரணமாக பல இடங்களில் முக கவசத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.அப்படி விற்பனை செய்த சில இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆப்பு வைத்த நிகழ்வுகளும் நடந்தேறியது. சாதரனமாக 5 ரூபாய்க்கு கிடைத்த முக கவசம் 50 ரூபாய் வரை விற்பனை ஆனது.இந்நிலையில் வத்தலக்குண்டு நகர SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரர் அப்துல்லா, நகரத் தலைவர் ஷேக் அப்துல்லா, நகரச் செயலாளர் சேக் முகமது, இன்ஜினியர் மீரான், அரசு மைதீன் ஆகியோர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் தமது சொந்த பணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முக கவசத்தை வாங்கி பொது மக்களுக்கு வழங்கினர்.இதில் ஆண்கள் பெண்கள் பேருந்தில் சென்றவர்கள் பலரும் வாங்கி உடனடியாக முகத்தில் அணிந்து கொண்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட முக கவசத்தை நூற்றுக்கும் அதிகமான நபர்களுக்கு வழங்கியது குறித்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.அரசாங்கம் அனைவருக்கும் இது போன்று இலவசமாக முக கவசம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!