17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கவலைப் படாதீங்க மக்களே உங்கள் பணம் திரும்ப கிடைக்கும்:-இரயில்வே துறை அறிவிப்பு..

கவலைப் படாதீங்க மக்களே உங்கள் பணம் திரும்ப கிடைக்கும்:-இரயில்வே துறை அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 24, 2020, 9:52 pm

ஆன்லைனில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் கேன்சல் செய்யத் தேவையில்லை என்றும், கேன்சல் செய்ததற்கான தொகை பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

இதேபோன்று கவுன்ட்டர்களில் ரயில் டிக்கெட்டுகளை எடுத்தவர்கள் ஜூன் 21-ம்தேதிக்கு முன்பாக கவுன்ட்டர்களுக்கு சென்று கேன்சல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தால் அவர்கள் கேன்சல் செய்யத் தேவையில்லை. ரயிலகள் நிறுத்தப்பட்டதால் டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டு விடும். ஆன்லைனில் புக் செய்தவர்களின் பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றால் கேன்சல் செய்வதற்கான கட்டணம் எடுத்துக் கொள்ளாமல், டிக்கெட்டுக்கான தொகை திருப்பிவழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!