17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது:-ராமதாஸ் வரவேற்பு…

இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது:-ராமதாஸ் வரவேற்பு…

எழுதியவர்: Askar March 24, 2020, 9:30 pm

கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று, பிரதமர் மோடியின் 3 வாரகால ஊரடங்கை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்!

நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைதான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த நிம்மதியளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு ஆணையை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் ஊரடங்கை பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட வேண்டும்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!