17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மேலகரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி-பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

தென்காசி மேலகரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி-பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

எழுதியவர்: mohan March 24, 2020, 7:12 pm

ஸ்கைலட் சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் ஸ்ரீ சவுமியா மேட்ரிமோனி சார்பில் தென்காசி மேலகரம் பேருந்து நிலையம் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,மேலகரம் முதல் நிலை பேரூராட்சி நிர்வாக அதிகாரி பதுருன்னிசா மற்றும் மேலகரம் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் ஜே என்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலகரம் சுகாதார ஆய்வாளர் சுடலைமணி கை கழுவும் முறைகளைப்பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்கைலைட் சாரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாக பொறுப்பாளர் சைலப்பன் -நிறுவனர் இராதா, செயலாளர் நவநீதகிருஷ்ணன், உறுப்பினர்கள் தஸ்னீம் பாத்திமா,நாகராஜன், ரஞ்சித்,அரவிந்த் மற்றும் இந்திய மனித உரிமை இயக்க அமைப்பு நிறுவனர் ஹமீது சுல்தான், சௌமியா மேட்ரிமோனி தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!