17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள்…

தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2020, 2:21 pm

தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா மூடைகள் கடத்தப்பட இருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் அறிவுறுத்தல் படி, தனிப்படையினர் தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடந்த 4 மூட்டைகளை கைப்பற்றினர். அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தலா 2 கிலோ வீதம் பாலித்தின் பையில் சுற்றிய 48 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

பின்னர் பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!