18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » +2 தேர்வு இன்று (24/03/2020) நிறைவடைகிறது… முழு பாதுகாப்புடன் பரிட்சை எழுதிய மாணவர்கள்…

+2 தேர்வு இன்று (24/03/2020) நிறைவடைகிறது… முழு பாதுகாப்புடன் பரிட்சை எழுதிய மாணவர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2020, 11:18 am

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு இன்றுடன் (24/03/2020) முடிவடைகிறது. இந்நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் அனைவரும் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இடம்;- கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகம்..

மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி தேர்வு மையத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

அதே சமயம் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!