18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்வாரிய ஊழியர் அலட்சியத்தால் குப்பையில் ஏற்பட்ட தீ.. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு படையினர்..

மின்வாரிய ஊழியர் அலட்சியத்தால் குப்பையில் ஏற்பட்ட தீ.. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு படையினர்..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 11:27 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் மல்லிகை வீதி பகுதியில் மின் மாற்றியின் அருகில் இருந்த மரக்கிளைகள் வெட்டி அங்கேயே தீ வைத்து சென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றும் (23/03/2020) அதுபோல் மரக்கிளைகளை மின் ஊழியர்கள் அகற்றி தீ வைத்ததில் அருகில் உள்ள காய்ந்த மரங்களுக்கு வேகமாக பரவி தீப்பற்றியுள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள் நீரை எடுத்து அணைக்க முயன்றனர் எனினும் தீ மேலும் எரிய ஆரம்பித்ததால் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் தீயை உடனடியாக அணைத்து பெரும் தீ விபத்தை தடுத்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இனத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி;- IMG_9268

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!