18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று உபகரணங்கள் வழங்க வேண்டும்:- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

செங்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று உபகரணங்கள் வழங்க வேண்டும்:- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

எழுதியவர்: Askar March 23, 2020, 9:26 pm

செங்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று உபகரணங்கள் வழங்க வேண்டும்:- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய்த்தொற்று உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செங்கம் பேரூராட்சி பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் முகக் கவசம் இதுவரை இல்லாமலேயே தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் சூழ்நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை நோய் தடுப்பு உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை என்று புலம்பி வருகின்றனர். பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசம் கையுறைகள் வழங்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!