18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தி.மு.க சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்…..

கீழக்கரை தி.மு.க சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்…..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 8:22 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர் திராவிட முன்னேற்றக் கழகம்த்தின் சார்பில் இன்று (23/03/2020)  நகர் கழக செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும், மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும், கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை பீஸா பேக்கரி அருகில் கோரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் உபகரணங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

அச்சமயம் நகர கழக செயலாளர் பசீர் அகமது கூறுகையில் “கொரோனா இல்லாத உலகை அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்“ என்று கூறினார்.  நகர் மாணவர் அணிச் அமைப்பாளர் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் கூறுகையில், “  அரசு எடுக்கும் முயற்சிக்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்து கோரொனா நோயில்லாத உலகை அமைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்”  என்றார்.

இதில் துணைச் செயலாளர்கள் ஜமால் பாருக், கென்னடி பொருளாளர் சித்திக்க,  முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி செயலாளர் மக்கள் டீம் காதர், மாவட்ட பிரதிநிதி  மரிக்கா, ஜபருல்லாஹ் , ஜெயினுதீன் ராஜா, அமீர்,  தம்பி வாப்பா, தவ்பிக், நயிம், பயாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸுக்காக SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!