17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே காய்ச்சலுக்கு மூலிகை மருந்தை உட்கொண்ட நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சை.

உசிலம்பட்டி அருகே காய்ச்சலுக்கு மூலிகை மருந்தை உட்கொண்ட நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சை.

எழுதியவர்: mohan March 23, 2020, 5:55 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் – கவிதா தம்பதியரின் மகன் திராவிட செல்வம் என்பவருக்கு சிறிய அளவு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முத்துக்கருப்பன் வீட்டில் இருந்த மூலிகை மருந்தை திராவிட செல்வத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது, இதில் மற்றவருக்கும் காய்ச்சல் பரவிவிடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனைவி கவிதா, மகன்கள் பெரியார் செல்வம், விஷ்வா என நான்கு பேரும் மூலிகை மருந்தை உட்கொண்ட நிலையில் நான்கு பேருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதில் பதற்றமடைந்த முத்துக்கருப்பன் நான்கு பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தாய் கவிதா திராவிடச்செல்வம் பெரியார் செல்வம் குணமடைந்தனர்.விஷ்வா மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!