மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(29) மற்றும் இவரது மனைவி சூர்யபிரபா(32). இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த மார்ச் – 6ம் தேதி சேடபட்டி அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்துவதற்காக வீட்டிற்கு கிராம செவிலியர் மீனாட்சி சென்றுள்ளார். அப்போது பெண்குழந்தை குறித்து கேட்டபோது கடந்த மார்ச் 15ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண்சிசு இறந்துவிட்டதாகவும், நாங்களே யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக வீட்டின் அருகே புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே பெண்செவிலியர் மீனாட்சி இது குறித்து சேடபட்டி கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரதாஸ்க்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேரையூர் காவல்துணை கண்காணிப்பாளர் மதியழகனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் சேடபட்டி போலீசார் விசாரனை நடத்தியதை தொடர்ந்து சேடபட்டி போலீசார் மற்றும் பேரையூர் வட்டாட்சியர் சாந்தி முன்னிலையில் பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரோதனை முடிவு வந்த பிறகு தான் தெரியும் பெண்சிசு இயற்கை மரணமா அல்லது பெண் சிசுகொலையா என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் பிறந்து பத்துநாட்களே ஆன பெண்சிசு இறந்துவிட்டதாக மறைமுகமாக புதைக்கப்பட்ட சம்பவம், அதிகாரிகள் முன்னிலையில் உடல்தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை.
எழுதியவர்: mohan March 23, 2020, 5:45 pm




You must be logged in to post a comment.