17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- மக்கள் ஊரடங்கு இருந்தபோதும் சிறப்பாக பணி மேற்கொண்ட தீயணைப்புத்துறையினர்..

மதுரை- மக்கள் ஊரடங்கு இருந்தபோதும் சிறப்பாக பணி மேற்கொண்ட தீயணைப்புத்துறையினர்..

எழுதியவர்: mohan March 23, 2020, 1:57 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை கிரீன்விச் அப்பார்ட்மெண்ட் மின்மாற்றியில்  மாலை   திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை  தீயணைப்புத்துறையினர் வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் மின்மாற்றி ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர் .இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றி வரும் நன்றி தெரிவிக்கும் கிரீன்வீச் அப்பார்ட்மெண்ட் வசிக்கும் பொதுமக்களுடன் தீயணைப்பு துறையினர் கைதட்டி நன்றி தெரிவித்தனர். மீண்டும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார்கள். பின் ஆறு முப்பது மணி அளவில் பைபாஸ் சாலையில் கால்வாயில் ஒரு பசுமாடு ஒன்று விழுந்ததாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வரவே விரைந்து வந்து கடும் போராட்டத்திற்குப் பிறகு கால்வாயில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.  அதிகாலை 1.30 மணியளவில் மதுரை புதுமண்டபம் நந்தி சிலை அருகே தனியார் கடையில் புகை வந்து உள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மதுரை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!