17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக  “கொரோனோ ” வைரஸ் விழிப்புணர்வு  பிரச்சாரம்..

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக  “கொரோனோ ” வைரஸ் விழிப்புணர்வு  பிரச்சாரம்..

எழுதியவர்: Askar March 22, 2020, 10:15 pm

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக  “கொரோனோ ” வைரஸ் விழிப்புணர்வு  பிரச்சாரம்..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் G.முனுசாமி அவர்கள் நேற்று மதுராந்தகம் நகராட்சிக்கு கொரோனோ வைரஸ் தடுக்கும் நோக்கில் 4 மருந்து தெளிப்பான் கருவிகள்., 10 லிட்டர் எதிர்ப்பு மருந்தும் வழங்கினார். மேலும் வைரஸ் நோய் கட்டுப்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்முறை விளக்கமும் நகராட்சி மருத்துவ ஆய்வாளர் லட்சுமி பிரியா செய்து காட்டினார்…மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் மாநில வர்த்தக சங்கத் தலைவர் S.மதியழகன்., மாநில துணைத்தலைவர் S.சிதம்பரம் ., மதுரை மாவட்ட செயலாளர் Dr.லிங்க செல்வி அவர்களும்., செயற்குழு உறுப்பினர்கள்., மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…

மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!