17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்:- ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி..

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்:- ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி..

எழுதியவர்: Askar March 22, 2020, 7:40 pm

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்:- ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி..

விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவிப்பு..

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது நீக்கம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அடிக்கடி விதண்டாவாதமாக பேசி சர்ச்சையில் சிக்குவதுண்டு. சமீபத்தில் கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.செய்தியாளர் ஒருவரை தாக்கிய விவகாரத்திலும் சிக்கியவர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் பால்வளத்துறை அமைச்சர் பதவியில் மட்டும் நீடிக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

அதிமுகவில் அமைச்சர் மணிகண்டன் நீக்கத்திற்குப் பிறகு நடந்துள்ள அதிரடி மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!