17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆட்சியர் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி நன்றி…

இராமநாதபுரம் ஆட்சியர் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி நன்றி…

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2020, 7:13 pm

கொரானா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உறுதுணையாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார துறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், குடும்பத்துடன் கை தட்டி உற்சாகப் படுத்தினர்.

கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களை வைரஸ் தொற்று பரவமால் தடுப்பு நடவடிக்கை எடுத்துவரும் உள்ளாட்சி அமைப்பு தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்களை பாராட்டும் விதமாக இராமேஸ்வரத்தில் சாதுக்கள், சந்நியாசிகள், போலீசார், பொதுமக்கள் தேசியக் கொடியுடன் கரவொலி எழுப்பி, மேளம் அடித்து, சங்கு ஊதி, மணி அடித்து நன்றி தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!