18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரலாற்றில் முதல் முறையாக தூங்கா நகர் மக்களை தூங்க வைத்த கொரோனா..

வரலாற்றில் முதல் முறையாக தூங்கா நகர் மக்களை தூங்க வைத்த கொரோனா..

எழுதியவர்: Askar March 22, 2020, 5:27 pm

வரலாற்றில் முதல் முறையாக தூங்கா நகர் மக்களை தூங்க வைத்த கொரோனா..

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை, பரவாமல் தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்கு உள்ளேயே இருந்தனர். பேருந்துகள் ஓடாததால் ஆரப்பாளையம்,மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தது. மாநகர் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மதுரையில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் முக்கிய சாலைகளான குரு தியேட்டர் பைபாஸ் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், அரசரடி போன்ற பகுதிகளில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!