17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே பைக் மோதி அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த பரிதாபம்-போலீசார் விசாரணை..

தென்காசி அருகே பைக் மோதி அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த பரிதாபம்-போலீசார் விசாரணை..

எழுதியவர்: Askar March 22, 2020, 3:15 pm

தென்காசி அருகே பைக் மோதி அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த பரிதாபம்-போலீசார் விசாரணை..

தென்காசி அருகே பைக் மோதி படுகாயமடைந்த ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தென்காசியில் உள்ள தனியார் போட்டோ ஸ்டுடியோவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமா செல்வி (வயது 50 ).இவர் சாம்பவர் வடகரை கீழூர் அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த 13ஆம் தேதி உமா செல்வி குத்துக்கல்வலசை ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது அவ்வழியே வந்த பைக் திடீரென அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

உமா செல்வி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த செங்கோட்டை நீராத்து தெருவை சேர்ந்த ரத்தினவேல் மகன் மாரி கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!