17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இஸ்லாம் » ஆன்மீகம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2017, 6:00 am

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) , தெரு மக்கள் இஸ்லாத்தின் இறைத்தூதர் வழியில் தொழுகை முறையை அமைத்துக் கொள்ளும் வகையில் தினசரி தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் பயன் பெறும் வகையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பின் மதரசா வளாகத்தில் ரமலான் மாதத்திற்கான சிறப்புத் தொழுகயும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் அனைவரும் பயன்பெறும் விதமாக இரவு நேரத் தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் பல சகோதரர்கள் தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!