எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மதுரையில் பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக உள்ளது. மதுரை மாநகர் வெறிச்சோடியது. கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவானது. சுமார் 98 சதவீத பொதுமக்கள் தங்களது இல்லங்களில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எப்பொழுதும் பரபரப்பாக கூடிய மதுரை பைபாஸ் சாலை மற்றும் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சிம்மக்கல் தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் கொரோனா வைரஸ் குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதன் விளைவாக அதன் விளைவுகளை மக்கள் எவ்வாறு அறிந்து உள்ளார்கள் என இந்த ஊரடங்கு உத்தரவு மூலம் தெரியவருகிறது. இதை அமல்படுத்தாத காரணத்தினால்தான் இத்தாலியில் பலர் மரணம் அடைய காரணம் எனவும் சாலையில் சென்ற ஒரு சில அவர்கள் கூறினார்கள். நாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்த காரணத்தினால் முக கவசம் அணிந்து வெளியே வந்துள்ளோம்.. உடனடியாக வீட்டுக்கு சென்று விடுவோம் எனவும் தெரிவித்தனர்…. இது மிகமிக விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளது எனவும் தமிழக அரசும் மத்திய அரசும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு மாற்று தேதிக்கு வைத்துள்ளனர். திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சில தவிர்க்க முடியாத சில விஷயங்கள் கூட்டம் இல்லாமலும் குறைந்த நேரத்திலேயே முடித்து அதிகாலையில் விசேஷங்களை முடித்து அவர்களுக்கு இல்லத்துக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். திருமண மண்டபத்தில் ஒரு விசேஷம் நடந்து கொண்டிருந்தது .அவர்களிடம் நாம் கேட்டபொழுது , கொரோனா வைரஸ் குறித்து மக்கள் ஊரடங்கு உத்தரவு உள்ளது எனக் கேட்டதற்கு பொருளாதார சூழ்நிலை காரணமாக எங்களால் நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடியவில்லை .ஆனால் அதிகாலையிலேயே இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டோம் .இப்பொழுது மண்டபத்தை காலி செய்துகொண்டிருக்கிறோம் விரைவில் நாங்கள் வீட்டுக்கு சென்று விடுவோம் எனவும் தெரிவித்தனர். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று சொல்லவேண்டும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.