17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுய ஊரடங்கு உத்தரவு எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதா??.. கூட்டமாக இருக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்…

சுய ஊரடங்கு உத்தரவு எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதா??.. கூட்டமாக இருக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2020, 1:35 am

கொரோனோ எனும் கொடிய வைரஸ் மனித இனத்திற்கே, மனிதனின் அறிவியல் அறிவுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுபாட்டுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இன்னும் பல வளர்ந்த மேற்கத்திய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்த வைரஸை எதிர்கொள்ளவும் இதனால் பாதிப்படைந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பொருளாதார ரீதியாக மீண்டு வர பல பில்லியனுக்கு சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் 22/03/2020 மட்டும் 14மணி நேரம் சுய ஊரடங்கு ஏற்படுத்தி கொள்ள இந்திய பிரதமரால் வலியுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின் நோக்கமே பொதுமக்கள் அதிகமாக கூடாமல் தனித்து இருக்க வேண்டும் என்பதே, ஆனால் பொதுமக்களோ இந்த அறிவிப்பினால் பீதியடைந்து கட்டுங்கடங்காத கூட்டமாக முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கி குவித்து உள்ளனர். கீழக்கரை மற்றும் சென்னையில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பீதியடைந்து, கடை. தெருக்கள் முழுவதும் விசேஷ கால ராத்திரி போல் கடைகள் அனைத்தும் நிறைந்து வழிந்தன” என்றனர்.  இதற்கு மேலே உள்ள புகைபடங்களே சாட்சி. இது பிரதமரின் வேண்டுகோளுக்கு எதிர்மறை விளைவாகவே பார்க்கப்படுகிறது.  இந்த விசயத்தில் ஆக்கப்பூர்வமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வழிவகுக்க வேண்டும். செய்யுமா??…. செய்வீர்களா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!