17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யுட்யூப் சேனல் தொடங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கீழக்கரை சிறுவன்..

யுட்யூப் சேனல் தொடங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கீழக்கரை சிறுவன்..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2020, 11:17 pm

கீழக்கரை அல்பையினா பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் முகம்மது ஜசீம், வயது 8 பருத்திகார தெருவைச் சார்ந்தவர்.

தற்சமயம் உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனோ வைரஸ் இச்சிறுவனை சிந்திக்க வைத்ததுடன், தானும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை எற்படுத்தியுள்ளது.  உடனே தானாகவே யுட்யூபில் ஒரு சேனலை உருவாக்கி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் சார்ந்த வைரஸ் உருவான விதம் மற்றும் காரணங்களை விளக்கி, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி அழகிய முறையில் விளக்கியுள்ளார். இச்சிறுவனின் இந்த சமூக நல அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது, மேலும் இச்சிறுவனின் இந்த அழகிய செயல் மற்ற மாணவர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. வீடியோவின்  லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

இச்சிறுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வக்கீல், கீழக்கரை சட்ட விழப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர், சத்தியபாதை பத்திரிக்கையின் சட்ட ஆலோசகருமான சாலிஹ் உசேனின் மகன் ஆவார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!