18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம்…

பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம்…

எழுதியவர்: Askar March 21, 2020, 7:57 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  தனியார் திருமண மண்டபத்தில் பாலக்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களை ஒன்றிணைத்து கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .இதில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், கொரானா வைரஸ் தொற்று மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, லிக்யூடு கொண்டு கைகளை சுத்தமாக கைக்கழுவும் படிநிலைகளை சுத்தம்  செய்ய வேண்டும். மேலும் கொரான வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாக்க காவலர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது. பாரதப் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது .இதில் பாலக்கோடு   டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர்கள் விஸ்வநாதன், கவிதா, தட்சிணாமூர்த்தி, துரைராஜ் மற்றும் . பாலக்கோடு  மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி மகேந்திரமங்கலம் காரிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!