மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டியைச் சேர்ந்தவர் பொண்ணையாத்தேவன் மகன் சுந்தர் (45). இவர் அதே ஊரில் சொந்தமாக மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் மாடுகளுக்காக தஞ்சாவூரிலிருந்து லாரியின் மூலம் வைக்கோல் ஏற்றிவந்துள்ளார். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே
பண்ணைப்பட்டி விலக்கில் வந்தபோது வைக்கோல் மீது மின்வயர் உரசியதால் வைக்கோலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே அருகிலிருந்தவர் லார்யை நிறுத்தி தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்த தீயனைப்பு துறையினர் சம்பவடத்திற்கு சென்று லாரியிலிருந்த வைக்கோல்களை அப்புறப்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 40ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் தீயில் கருகி சேதமடைந்துவிட்டது. தீ பரவிய உடனே சம்வமறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீயை கட்டுக்கொள் கொண்டுவந்ததால் லாரிக்கு தீப்பற்றாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி விலக்கில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் வயரில் உரசி தீப்பிடித்தில் லாரியிலிருந்த வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.
எழுதியவர்: mohan March 21, 2020, 7:58 pm




You must be logged in to post a comment.