இணைய தளத்தில் பதிவுசெய்த பயணச் சீட்டுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இந்த பயணிகள் பயண கட்டணத்தை திரும்ப பெற ரயில் நிலையத்திற்கு வரவேண்டியதில்லை.ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 15 வரை அமலில் இருக்கும்.ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்தால், பயணச்சீட்டை பயண தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்யாத போது பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு ஒப்புவிப்பு ரசீது பதிவுசெய்து கொள்ள வேண்டும். பின்பு இந்த ரசீதை பதிவு செய்த 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோட்ட வர்த்தக மேலாளருக்கு அனுப்பி வைத்து பயணக்கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.பயணத்தை தொலைபேசி எண் 139 வாயிலாக ரத்து செய்தவர்கள், பயண கட்டணத்தை பயண தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலைய முன் பதிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போதைய பேரிடர் காலத்தில், பயணிகள் இந்த விதிமுறைகள் மாற்றத்தை பயன்படுத்தி ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில்வே நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கொரோணா வைரஸ் பரவல் எதிரொலி முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளின் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது.
எழுதியவர்: mohan March 21, 2020, 5:16 pm




You must be logged in to post a comment.