17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கோடு போட்டாலும் சரி, ரோடு போட்டாலும் சரி அரசு எங்களுக்கு நல்லது தான் செய்யும்:- மது பிரியர்கள் ஆனந்த கண்ணீர்.

கோடு போட்டாலும் சரி, ரோடு போட்டாலும் சரி அரசு எங்களுக்கு நல்லது தான் செய்யும்:- மது பிரியர்கள் ஆனந்த கண்ணீர்.

எழுதியவர்: Askar March 20, 2020, 10:21 pm

கொரோன வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜவுளி கடைகள் நகை கடைகள் மதுபான பார்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் ஆகியவை அடைக்க சொல்லியும் முடிந்த அளவுக்கு கூட்டங்கள் சேர்வதை தடுத்தும்  வருகிறது.

இருந்தபோதிலும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் பொதுமக்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டிருந்தது. அரசு நமக்காக இப்படியெல்லாம் ஏற்பாடுகள் செய்கிறதே என  மது பிரியர்கள் சந்தோஷம் அடைந்து வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!