17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு என பொய்யான தகவல் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

செங்கம் அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு என பொய்யான தகவல் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

எழுதியவர்: Askar March 20, 2020, 8:23 pm

செங்கம் அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு என பொய்யான தகவல் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(25) இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என தனியார் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸ் வெளியானது போல் வாட்சப்பில் வெங்கடேஷ் செய்தி வெளியிட்டுள்ளார் இதை பார்த்த மருத்துவ துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கந்தசாமி கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது கலெக்டர் உத்தரவின் பேரில் போலிசார் விசாரணை நடத்தியதில் இச்செய்தி போலி என தெரியவந்தது இதையடுத்து போலி செய்தியை வெளியிட்ட கல்லூரி மாணவர் வெங்கடேசை செங்கம் சப் இன்ஸ்பெக்டர் சாலமென்ராஜா கைதுசெய்தார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!