வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2019- 20-ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி பரிந்துரையின் படி சர்க்கரை இருப்பு ஈட்டுறுதி காசுக் கடனாக ரூ 30 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரத்திற்கான அனுமதி ஆணையை வங்கியின் தலைவர் வி.ராமு இணைப்பதிவாளர் மேலாண்மை கேஜெயம் ஆகியோர் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.ஆனந்தன் மற்றும் மேலாண்மை இயக்குநர் சங்கரிடம் வழங்கினர்.நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.சி. பூங்காவனம்’ டி.கோபி பொது மேலாளர் ஜி.வி.விஜயபானு மற்றும் சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் எஸ்.வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ 30 கோடி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கடன்
எழுதியவர்: mohan March 20, 2020, 5:59 pm




You must be logged in to post a comment.