17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஹிந்தித்துறை சார்பாக “ஹிந்தியின் செயல்பாடுகள்” பற்றிய ஒருநாள் கருத்தரங்கு..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஹிந்தித்துறை சார்பாக “ஹிந்தியின் செயல்பாடுகள்” பற்றிய ஒருநாள் கருத்தரங்கு..

எழுதியவர்: ஆசிரியர் March 20, 2020, 1:48 pm

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஹிந்தித்துறை சார்பாக “ஹிந்தியின் செயல்பாடுகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்துப்பட்டறை கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இக்கருத்துப்பட்டறையில் திருமதி.ஜே.சுனிதா ஹிந்தித்துறைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார். முனைவர் திருமதி எ.ஜாஸ்மின் கலைப்புல முதன்மையர் மற்றும் வணிக மேலாண்மையியல் துறைத் தலைவர் தலைமையுரையாற்றினார்.

முனைவர் ரோகினி பாண்டியன் ஹிந்தித்துறைத்தலைவர் சௌராஷ்டிரா கல்லூரி, மதுரை சிறப்பு விருந்தினராக கலந்துண்டு சிறப்புரையாற்றினார். திருமதி எஸ். உமாராணி ஹிந்தித்துறை பேராசிரியர் நன்றியுரையாற்றினார். இக்கருத்துப்பட்டறையில் கல்லூரி துணைமுதல்வர்கள், தேர்வாணையர், கலை மற்றும் அறிவியல்புல முதன்மையர்கள், பல்துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்துப்பட்டறைக்கான ஏற்பாடுகளை ஹிந்தித்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!