மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி பகுதியில் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக மாவட்டகாவல்துறை எஸ்பி
தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபர்களை சோதனை செய்த போது அதே ஊரைச் சேர்ந்த காசிமாயன் மகன் முருகன்(51), பெரியகருப்பன் மகன் கீர்த்திகான்(19), மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டி மகன் ராஜசேகர் (31) ஆகியோர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மூவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து பதுக்கி வைத்திருந்த 22கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைதொடர்ந்து போலீசார் மூவர் மீது வழக்குபதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் 22கிலோ கஞ்சாவுடன் மூன்றுபேர் கைது
எழுதியவர்: mohan March 20, 2020, 12:10 pm




You must be logged in to post a comment.