17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » சாக்கடை நீரால் தோரணம் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரசு மருத்துவமனை..

சாக்கடை நீரால் தோரணம் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரசு மருத்துவமனை..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2017, 7:08 am

இராமநாதபுரத்தில் பிராதான சாலையில் அமைந்து உள்ளது அரசு மருத்துவமனை. இம்மருத்துவமனைக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் வருவார்கள். இங்கு சுகாதாரம் என்பது எப்பொழுதுமே ஒரு கேள்விக் குறிதான்.

ஏற்கனவே சுகாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இம்மருத்துவமனையை தற்சமயம் தனியார் வணிக வளாகத்தில் இருந்து வழிந்தோடி வரும் கழிவு நீர் மருத்துவமனைக்கு தோரணம் கட்டியுள்ளது. இக்கழிவு நீரால் இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் பல அரசு அதிகாரிகள் கடந்து செல்லும் இப்பாதையில் இந்தக் கழிவுநீர் அவலம் கண்ணில் படாதது ஆச்சரியம்தான்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!