இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா.ராஜா ஆலோசனை படி, மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் கொரானா வைரஸ் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் , முக்கிய அலுவலகங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தனன் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கை கழுவும் முறை குறித்து சுகாதாரப்பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் கொரானா வைரஸ் தடுப்பு பணி
எழுதியவர்: mohan March 19, 2020, 12:08 pm




You must be logged in to post a comment.