18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் மலைமீது தீ விபத்து

திருப்பரங்குன்றம் மலைமீது தீ விபத்து

எழுதியவர்: mohan March 19, 2020, 12:03 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மீது  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதை பார்த்த பொதுமக்கள் மதுரை  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கவே விரைந்து சென்ற மதுரை நிலைய அதிகாரி வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் மலைமேலே எரிந்து கொண்டிருந்த தீயை மிகவும் சிரமப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதனால் மேலும் காட்டு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது .இதனால் பல உயிரினங்களும் குரங்கு மற்றும் மயில்கள் இந்த தீ விபத்தில் தப்பினர் .முதல் கட்ட விசாரணையில் தீவிபத்து வெயிலின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்…. தீயணைப்புத்துறை செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!