17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் ஆசிரியர்கள் கிராமப்புற மக்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்..

செங்கம் பகுதியில் ஆசிரியர்கள் கிராமப்புற மக்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்..

எழுதியவர்: Askar March 18, 2020, 11:22 pm

செங்கம் பகுதியில் ஆசிரியர்கள் கிராமப்புற மக்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்..

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து செங்கம் பகுதியில் அனைத்து வகை ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நடப்பு கல்வியாண்டுக்குரிய தேர்வு பணிகள் மற்றும் 2020-21-ம் ஆண்டுக்குரிய ஆண்டு திட்டம், கால அட்டவணை தயாரிப்பு, திக்‌ஷா அப்ளிகேஷன் மூலம் கியூ ஆர் கோடில் உள்ள பாட விவரங்களை சேகரித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புக்குரிய மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப்பணிகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களின் பணி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!