18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் அருகே கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை..

முதுகுளத்தூர் அருகே கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை..

எழுதியவர்: ஆசிரியர் March 18, 2020, 8:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழகொடுமலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 29/ இவரது மனைவி போதும்பொண்ணு, 28. இந்நிலையில் ஆறுமுகத்தின் தம்பி முறையான வேல்முருகன், போதும் பொண்ணுடன் தவறான உறவு வைத்திருந்தார். இதையறிந்த ஆறுமுகம் மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த போதும் பொண்ணு, வேல்முருகனுடன் சேர்ந்து 2018 ஜூலை 17 ஆம் தேதி ஆறுமுகத்தை  உயிருடன் எரித்துக் கொலை செய்தார்.

இது குறித்து ஆறுமுகத்தின் தாய் சண்முகவள்ளி புகாரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், போதும்பொண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், ஆறுமுகத்தை கொலை செய்த போதும்பொண்ணு, வேல்முருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!