18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளாம்பட்டியில் சமுதாயக்கூடம் முன்பு குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

விளாம்பட்டியில் சமுதாயக்கூடம் முன்பு குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan March 18, 2020, 6:39 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாம்பட்டி ஊராட்சியில் முத்தாலம்மன் கோவில் அருகே அரசு தரப்பில் சமுதாயக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.    இந்த சமுதாய கட்டிடத்தில் அவ்வப்போது திருமணம் காதுகுத்து மற்றும் சிறுசிறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் சமயங்களில் குப்பைகளை சமுதாயக்கூடம் முன்பே கொட்டி சென்றுவிடுகிறார்கள். இதன் காரணமாக குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்தப் பகுதியில் குடியிருப்பு , மற்றும் கோவில் , தொடக்க பள்ளி, மற்றும் கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் செல்லக்கூடிய இடமாக இருப்பதால் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.     இது சம்பந்தமாக உயர்மட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!