18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமு பிள்ளை சத்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பை வழங்கும் விழா

காமு பிள்ளை சத்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பை வழங்கும் விழா

எழுதியவர்: mohan March 18, 2020, 6:36 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் காமுபிள்ளை சத்திரத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 500 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகப்பை மற்றும் கல்வி உதாரணங்கள் நிலக்கோட்டை கனரா வங்கி கிளை சார்பாக கிளை மேலாளர் காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ராஜன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் மோகனான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நூத்து லாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், வங்கி கிளை துணை மேலாளர் ராகுல், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!