17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்.

மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்.

எழுதியவர்: mohan March 18, 2020, 6:26 pm

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில்  சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் ஹபீபுல்லாஹ் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட பொருளாளர் மன்சூர் அஹமத், மாவட்ட துணைத்தலைவர் ஜெயினுலாபுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!