17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நகராட்சியை குற்றம்சாட்டும் முன் மற்றவர்களும் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டாமா??.. கீழக்கரை ஜும்ஆ பள்ளி நடுத்தெருவின் சுகாதார சீர்கேடு…

நகராட்சியை குற்றம்சாட்டும் முன் மற்றவர்களும் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டாமா??.. கீழக்கரை ஜும்ஆ பள்ளி நடுத்தெருவின் சுகாதார சீர்கேடு…

எழுதியவர்: ஆசிரியர் March 18, 2020, 4:31 pm

பொதுவாகவே நகராட்சி நிர்வாகம் எவ்வளவோ சீர்திருத்த பணிகள் செய்தாலும், பாராட்டுதல் குறைவாகவே இருக்கும் ஆனால் குறை எனும்பட்சத்தில் குற்றசாட்டுகள் பல முனைகளில் இருந்து வைக்கப்படும்.  ஆனால் அதே சமயம் சுற்றுபுற சுகாதாரத்தை பேணுவதில் பொதுமக்கள் மற்றும் வியாபாரம் நடத்துபவர்களுக்கும் முக்கிய பங்குண்டு, ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் சமூக சுகாதார கேடுக்கு அப்பகுதி மக்களும், பிற மக்களுமே காரணமாக இருப்பது மிகவும் வேதனையான விசயம்.

இதற்கு உதாரணம் கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியின் பின்புறம், இப்பகுதி அதிகமான பொதுமக்கள் தொழுகைக்கு செல்லவும், பிற தேவைகளுக்காக செல்லும் முக்கிய பகுதிகயாகும்.  ஆனால் இங்கு வாருகாலில் பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை கொட்டுவதால், வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் சாக்கடை வழிந்தோடி சுகாதார கேடு ஏற்பட காரணமாக உள்ளது. மேலும் அருகிலேயே மின்சார டிரான்ஸ்ஃபார்மர் இருப்பதால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதுபற்றி அப்பகுதியை சார்ந்த உசேன் என்பவர் கூறுகையில், “இந்த வாருகாலில் கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் இருந்து வருவதும், மேலும் இப்பகுதியில் உள்ள வியாரிகளுமே” என்று வேதனையுடன் கூறினார்.  சமுதாய பொறுப்புடன் நடக்க வேண்டியவர்களே இவ்வாறு செயல்பட்டால் பொதுமக்களிடம் சமுதாய பொறுப்பு ஏற்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!