மதுரை திருநகர் எஸ்ஆர்வி நகரைச் சேர்ந்தவர் அசோக்(32). இவர் மனைவி சுதா(27). திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது .அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அசோக் குடித்துவிட்டு வந்தபோது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கணவன் தன்னுடைய மனைவி சுதா கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் .தகவலறிந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ( நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக )உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.