தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராகதமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஏ.முஹம்மது அய்யூப்கான் தலைமையில் அரசு போக்குவரத்து கழகப் பணிமனை அருகில் இன்று (18/03/2020) நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான் அலி, மாவட்ட துணைத் தலைவர் முஹமது பஷீர், மாவட்ட துணை செயலர்கள் மன்சூர் அலி, சகுபான் அலி, சுல்தான், தஸ்தஹீர், ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் மஹ்தூம் பேசியதாவது: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏப்ரல் மாதம் துவங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தேசிய மக்கள் பதிவேடு வேலை எளிதாகிவிடும் . தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப்படுவர் என்பதால் இதை ஆதரிப்போர் கூட இதற்கெதிராக குரல் கொடுத்தும், சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர் , குடியுரிமை திருத் சட்டம் தேசிய மக்கள் பதிவேடுக்கு ஆதரவாக வாக்களித்து மோடி, அமித்ஷாவின் ஆசையை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. அதிமுக அரசின் இத்தகைய நிலைப்பாட்டால் தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக மக்களின் உரிமையை காக்க குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் எழுதப்படிக்க தெரியாத லட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இவர்களால் மத்திய அரசு கோரும் ஆவணங்களை காட்ட முடியாது. இவர்கள் பிறப்புச் சான்றிதழ் காட்டவில்லை எனில் அகதி பட்டியலில் இடம் பெறுவர். 90 நாட்கள் கடந்து தமிழகத்தில் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் பேசினார் .
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் .























You must be logged in to post a comment.