18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசியல் காழ்புணர்ச்சி காரணமா? அரசு மருத்துவமனை திறக்காமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை!

அரசியல் காழ்புணர்ச்சி காரணமா? அரசு மருத்துவமனை திறக்காமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை!

எழுதியவர்: mohan March 18, 2020, 10:31 am

திருப்பரங்குன்றத்தில் கிரிவல பாதையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ம் தேதி 60 படுக்கைகளுடன் கூடிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கட்ந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.இதனைத் தொடர்ந்து சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ மேல் சிகிச்சை தேவைப்படுவோர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால் இங்கு தினந்தோறும் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் உள்நோயளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபடாமல் உள்ளது. குறிப்பாக சுமார் 1.5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 60 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் மருத்துவமனை கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை இதனால் 60 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி மூன்று ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்பொழுது திமுகவைச் சேர்ந்த மருத்துவர் திரு சரவணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டது மருத்துவமனை திறக்கப்படாத காரணமாகவும் கூறப்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் பல நோயாளிகள் அவதி படுவதாகவும் மருத்துவமனையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக கூறுகின்றனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!