17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுக்கடை வேண்டாம்-பெண்கள் மதுக்கடை இல்லாவிட்டால் தற்கொலை செய்வோம் -ஆண்கள் .உசிலம்பட்டி அருகே நடைபெற்ற விசித்திர சம்பவத்தால் பரபரப்பு.

மதுக்கடை வேண்டாம்-பெண்கள் மதுக்கடை இல்லாவிட்டால் தற்கொலை செய்வோம் -ஆண்கள் .உசிலம்பட்டி அருகே நடைபெற்ற விசித்திர சம்பவத்தால் பரபரப்பு.

எழுதியவர்: mohan March 18, 2020, 9:44 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டத்;தேவன்பட்டி பாண்டியன் நகர் அருகில் கடந்த இரு நாட்களுக்கு முன் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது.உசிலம்பட்டி திருமங்கலம் பிரதான சாலையில் இந்த பாண்டியன் நகர் பிரிவில இறங்கித்தான் கட்டத்தேவன் பட்டி ஓணாப்பட்டி பேயம்பட்டி உள்பட 10 கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.இச்சாலைப்பிரிவில் சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில் டாஸ்மார்க் கடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இக்கடையில் மது அருந்துபவர்களால் பேருந்து நிறுத்தப்பிரிவில் இறங்கி கிராமங்களுக்குச் செல்லும் பெண்கள் பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மார்க்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த அப்பெண்களின் கணவன்கள் அங்கு வந்து மனையியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.போலிசார் இருவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.மதுக்கடை வேண்டாம் என பெண்கள் கூறியதைக் கண்ட ஆண்கள் தங்களின் சோகக்கதையை விவரிக்க ஆரம்பித்தனர்.இதுவரையில் 6 கி.மீ பயணித்து மது வாங்கி அருந்திய நாங்கள் தற்போது அருகிலுள்ள இந்த மதுக்கடையால் தங்களின் பொருளாதாரம் பெருமளவில் மிச்சமாவதாகவும் இக்கடை இல்லாவிட்டால் போலிசாருக்கு அபராதம் சிலசமயங்களில் போலிசாரே வண்டியிலுள்ள மதுபாட்டில்களை எடுத்துக் கொள்வதாகவும் உண்மையில் மதுக்கடை அருகில் வந்ததினால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிலரின் தூண்டுதலின் பேரில் ரூ300 வாங்கிக் கொண்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.இந்த மதுக்கடையை அகற்றினால் ஆண்கள் அனைவரும் தூக்கில் தொங்குவோம் என மிரட்டல் விடுத்தனர்..மதுக்கடை பல நேரம் கெட்டதாக இருந்தாலும் அரிதாக சில நேரம் ஆண்களுக்கு பயனள்ளதாக இருக்கிறது என்பதே உண்மை.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!