கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சாத்தனூர் அணைக்கு செல்ல தடை. தமிழக அரசு உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக அணையைச் சுற்றிலும் பூங்கா, நீச்சல் குளம், படகு,, வண்ண மீன், காட்சியகம்,, முதலைப்பண்ணை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையை சுற்றிப்பார்க்க தினமும் உள்ளூர் மற்றும் வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,,சேலம், தர்மபுரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, மதுரை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை மூடி வைப்பதாக தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் நுழைவு வாயில் கதவை பூட்டினார் .அதில் சுற்றுலா பயணிகள் அறியும் வண்ணம் வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நடவடிக்கையின் பொருட்டு சாத்தனூர் அணை பூங்கா மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்கப் படுகிறது என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அணை பூங்கா அணை ஊட்டப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்ர. இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ் கூறுகையில்: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஷாப்பிங் மால், நீச்சல் குளம் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சாத்தனூர் அணையில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்காமல் மூடப்பட்டுள்ளது என்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.