செங்கம் பஸ்நிலையத்தில் பேருந்துகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டைசால் தெளிப்பான் பூச்சி மருந்து அடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ்நிலையத்தில் வந்த பஸ்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்துநிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் டைசால் தெளிப்பான் பூச்சிமருந்து அடிக்கப்பட்டது. மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சேகர் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் பூச்சிமருந்துகளை அடித்தனர்.
செய்தியாளர் , செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.