17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் மது மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து வருவாய்த்துறை சார்பில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாலக்கோட்டில் மது மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து வருவாய்த்துறை சார்பில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எழுதியவர்: Askar March 17, 2020, 7:43 pm
பாலக்கோட்டில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் போதைக்கு அடிமையானவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், உடல் வலிமை இழப்பது போதையால் குடும்ப சூழ்நிலைகள் மாறுவது உள்ளிட்ட பாதிப்புகளை குறித்து பயணிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் கள்ளச்சாராயம் கடத்துவது வைத்திருப்பது ,விற்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந் நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜா உடன் மண்டல துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, வருவாய் ஆய்வாளர் ஞானதீபம், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், செல்வம், உள்ளிட்ட வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!