கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பார்வையிட வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரகணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(18.3.2020) முதல் வரும் 31 ஆம் தேதி வரை மூடுவதாக சென்னை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மேலாளர் அறிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.