திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இ.பி. காலணி அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் 1963 முதல் 1975 ஆம் ஆண்டு நிலக்கோட்டையில் உள்ள பள்ளிகளில் நிலக்கோட்டை நாடார் நடுநிலைப் பள்ளியிலும் , நிலக்கோட்டை சௌராஷ்ட்ரா நடுநிலை பள்ளியிலும், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 12
ஆண்டுகள் தொடர்ந்து நண்பர்களாக பயின்ற பழைய மாணவ, மாணவியர்கள் சந்திக்கும் பழைய மாணவர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் செல்லப்பா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகப் பொறுப்பாளர் லெனின் வரவேற்று பேசினார். சந்திப்பு நிகழ்ச்சியில் 1963 ஆண்டுமுதல் 1975 ஆண்டு வரை தனது இளமைக் கால படிப்பு குறித்தும் பழைய நினைவுகள் பற்றியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்களாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆசிரியர்கள் மிக வயதானவர்களாக இருந்தாலும் தங்களது மாணவர்களை மாணவர்களாக கருதி வாழ்த்தி ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் சுந்தரம், மருதமுத்து, செல்வராஜ், ராஜசேகரன், ரமேஷ்பாபு, ராஜலட்சுமி மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரிப்பன், திருநாவுக்கரசு, ஜெயராணி , மனோன்மணி சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.