இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பழஞ்சிறை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் சாரண, சாரணிய மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மண்டபம் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்க துணை செயலர் ஜெரோம்,அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி சாரண ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். ஆசிரியர் இலக்கியா வாழ்த்துரை வழங்கினார்.சாரண, சாரணிய மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி வளாகம் மற்றும் சுற்று பகுதியில் மரக்கன்று நட்டனர். கொரோனா வைரஸ் தடுப்ப குறித்து பழஞ்சிறை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கை கழுவும் முறை, முககவசம் அணிவது குறித்து செயல் விளக்கம், விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.







You must be logged in to post a comment.